தின பலன் 1.10.2013
மேஷம்:
இன்று, எவருடனும் பேசுவதில் நிதானம் பின்பற்ற வேண்டும். இதனால், கருத்து வேறுபாடு வராமல் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் தேவையான நடைமுறை மாற்றங்களை, அளவான பணச்செலவில் நிறைவேற்றுவது நல்லது. குடும்பத் தேவைக்கு சேமிப்பு பணம் பயன்படும். உணவுப் பொருள் தரம் அறிந்து உண்ணவும்.
ரிஷபம்:
இன்று, உங்கள் செயல்களில் நியாய, தர்மத்தை அதிகம் பின்பற்றுவீர்கள். இஷ்ட தெய்வ அருள் பலம் துணை நின்று உதவும். தொழில், வியாபார வளர்ச்சியில், புதிய பரிமாணம் ஏற்படும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். சந்திக்க நினைத்த நண்பர், உங்களை தேடி வருவார்.
மிதுனம்:
இன்று, நீங்கள் தொடர்பில்லாத பணி ஒன்றில் ஈடுபட நேரலாம். குடும்ப உறுப்பினர், நிறைவேற்ற வேண்டிய பணிகளின் முக்கியத்துவம் உணர்த்துவர். தொழில், வியாபார நடைமுறையில் ஆரவாரத் தன்மை கூடாது. எதிர்பார்த்த பணவரவு, கூடுதல் முயற்சியால் கிடைக்கும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு வகை உண்ண வேண்டாம்.
கடகம்:
இன்று, கருணை நிறைந்த மனதுடன் செயல்படுவீர்கள். பிறர் உங்களை வித்தியாச கோணத்தில் மதிப்பிடுவர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற, தேவையான மாற்றம் பின்பற்றுவீர்கள். தாய்வழி உறவினர், கூடுதல் அன்பு பாராட்டுவர். உத்தியோகஸ்தர்கள் பெற வேண்டிய சலுகைப் பயன் எளிதில் கிடைக்கும்.
சிம்மம்:
இன்று, உங்களைச் சுற்றி நடக்கிற நிகழ்வுகளால், மனதில் அதிருப்தி ஏற்படலாம். எவரிடமும் பயன் அறிந்து பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேற்ற, கூடுதல் அக்கறை கொள்வீர்கள். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
கன்னி:
இன்று, சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். முன்னர் அவமதித்து பேசிய சிலர், உங்களின் மென்மையான குணம் உணர்ந்து அன்பு பாராட்டுவர். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். வெகுநாள் தேடிய பொருள் கைவந்து சேரும். விருந்து, விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள்.
துலாம்:
இன்று, உங்கள் பணிகளில், அன்பை பிரதானப்படுத்தி செயல்படுவீர்கள். எதிர்பார்த்ததை விட, அதிக நற்பலன் கிடைக்கும. தொழில், வியாபார வளர்ச்சியில் வியத்தகு முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் லாப விகிதம் அதிகரிக்கும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.
விருச்சிகம்:
இன்று, நீங்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த தாமத செயலில், புதிய திருப்பம் ஏற்படும். உண்மை நிலை அறிந்து, மாற்று நடவடிக்கை பின்பற்றுவது நன்மை பெற உதவும். தொழில், வியாபாரத்தில் உள்ள மந்த நிலையை சரி செய்வீர்கள். போக்குவரத்தில் கவன நடை நல்லது. தியானம், தெய்வ வழிபாடு நன்மை பெற உதவும்.
தனுசு:
இன்று, மனதில் இனம் புரியாத வருத்தம் ஏற்படலாம். உங்கள் நலம் விரும்புவோரின் உதவியும், ஊக்கமும் நல்வழி நடத்தும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை இலக்கை அடைய கூடுதல் பணிபுரிவீர்கள். சொத்து ஆவணம் பராமரி“ப்பதில், தகுந்த பாதுகாப்பு நடைமுறை பின்பற்ற வேண்டும்.
மகரம்:
இன்று, உங்கள் மனதில் ஞான சிந்தனை அதிகரிக்கும். செயல்களில் கூடுதல் வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திருப்திகரமான வகையில், வளர்ச்சி பரிமாணம் ஏற்படும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.
கும்பம்:
இன்று, உங்களின் தகுதி, திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். எதிரி இடம் மாறிப்போகிற நன்னிலை உண்டு. தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். நிலுவை பணக்கடனில், ஒரு பகுதி செலுத்துவீர்கள். உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும்.
மீனம்:
இன்று, மனதில் சிலரைப் பற்றிய நம்பிக்கையில் மாற்றம் கொள்வீர்கள். சொந்தப் பணியில் பொறுப்புணர்வுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உழைப்பிற்கு தகுந்த பலன் கிடைக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறை பின்பற்றுவது நல்லது. தகுந்த ஓய்வு, உடல் நலம் பெற உதவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக