புதன், 2 அக்டோபர், 2013

தின பலன் 2.10.2013

மேஷம்: 
இன்று, உங்களின் பொறுப்பான செயல் சிலரால் தவறாக விமர்சிக்கப்படலாம். அமைதி மனப்பாங்குடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அளவான பணவரவு கிடைக்கும். நண்பர் வாங்கும் பொருளுக்கு, நீங்கள் பேரம் பேசுவதால் அதிருப்தி ஏற்படலாம்.

ரிஷபம்:
இன்று, உங்கள் குடும்ப பெரியவர்களின் சொல்லுக்கு, உரிய மரியாதை தருவது அவசியம். திட்டமிட்ட பணி மட்டுமே, தகுந்த வெற்றி இலக்கை அடையும். சகதொழில், வியாபாரம் சார்ந்தவர்களிடம் மனக்கிலேசம் வராத அளவிற்கு நடந்து கொள்வது நல்லது. பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

மிதுனம்: 
 இன்று, முன்னர் உங்கள் பணியில் இடையூறாக செயல்பட்டவர், விலகிப்போகிற நன்னிலை உண்டு. நடைமுறை வாழ்வில் சில மாற்றங்களை பி"னபற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். கூடுதல் சொத்து சேர்க்கை பெறுவீர்கள். உறவினர் இல்ல சுபநிகழ்ச்சியில், கலந்து கொள்ள அழைப்பு வரும்.

கடகம்: 
இன்று, உங்கள் வாழ்வியல் நடைமுறையில் உள்ள சிரமம் பற்றி, பிறரிடம் சொல்ல வேண்டாம். இஷ்ட தெய்வ அருளால், நன்மை தருகிற மாற்றம் உருவாகும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனையில் சிறிது சுணக்க நிலை இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு ஊட்டம் தரும் உணவு உண்பது நல்லது.

சிம்மம்: 
 இன்று, நண்பரிடம் முன்னர் பெற்ற உதவிக்கு, நன்றி பாராட்டும் வகையில் செயல்படுவீர்கள். மனதில் இருந்த கவலை விலகும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சீராகும். பணப்பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். முக்கிய வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள்.இல்லறத் துணையின் அன்பில் மகிழ்வீர்கள்.

கன்னி: 
இன்று, உங்களின் முக்கியமான காரியத்தை பிறர் பொறுப்பில் தரக்கூடாது. ஆரவாரம் தவிர்ப்பதால், முயற்சி சீராக நிறைவேறும். தொழில், வியாபாரத்தி"ல் முன்னேற்றம் பெற அதிக உழைப்பு அவசியமாகும். குறைந்த அளவில் பணம் கிடைக்கும். இயந்திர தொழிற்சாலை பணியாளர்கள், கூடுதல் பாதுகாப்பு நடைமுறை பின்பற்ற வேண்டும்.

துலாம்: 
 இன்று, மனதில் புதிய சிந்தனை பிறக்கும். பலநாள் திட்டமிட்ட செயலை, நேர்த்தியுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிபெற முக்கியஸ்தரின் உதவி கிடைக்கும். உற்பத்தி, விற்பனை அதிகரித்து தாராள பணவரவு பெறுவீர்கள். இல்லறத் துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பணியாளர்களுக்கு சலுகைப் பயன் கிடைக்கும்.

விருச்சிகம்:
இன்று, உங்கள் குடும்ப உறுப்பினர்கள், அதிக பாசத்துடன் நடந்து கொள்வர். முக்கியப் பணி எளிதாக நிறைவேறும் தொழில், வியாபார வளர்ச்சியில் அபிவிருத்தி ஏற்படும். சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். உத்தியோகஸ்தர் சிறந்த பணிக்காக பாராட்டு வெகுமதி பெறுவர்.

தனுசு: 
இன்று, நீங்கள் அறிமுகம் இல்லாத எவரிடமும், பொது விஷயம் பேச வேண்டாம். சொந்தப் பணியில் தகுந்த ஆர்வம் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற்ற தாமதமாகும். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்பதால், உடல்நல ஆரோக்கியம் சீராகும்.

மகரம்:
இன்று, உங்களுக்கு மறைமுகமாக இடையூறு செய்பவரை அடையாளம் காண்பீர்கள். அவர் சொல்லுக்கு எதிர் கருத்து தெரிவிக்காமல், பெருந்தன்மையுடன் விலகுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவாகிற மாறுபட்ட சூழ்நிலையை சரிசெய்ய, கூடுதல் அவகாசம் தேவைப்படும். சராசரி பணவரவு கிடைக்கும். தியானம், தெய்வ வழிபாடு செய்து மன அமைதி பெறுவீர்கள்.

கும்பம்:
 இன்று, கடந்த காலத்தில் நீங்கள் செய்த நல்ல பணி ஒன்றுக்கு, உரிய பலன் தே வரும். எதிர்கால வாழ்வில் புதிய நம்பிக்கை கொள்வீர்கள். தொழில், வியாபார இலக்கு எளிதாக நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். புத்திரர் பப்பில் முன்னேற, தேவையான உதவி வழங்குவீர்கள்.

மீனம்: 
 இன்று, உங்கள் மனதில் உற்சாகமும், செயல்களில் சுறுசுறுப்பும் நிறைந்திருக்கும். குடும்ப உறுப்பினர்களின் வாழ்த்துக்களுடன், சிறப்பான பணி ஒன்றை துவங்குவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த போட் குறையும். சராசரி பணவரவுடன் நிலுவைப் பணம் வசூலாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகி, பதவி பெற வாய்ப்பு வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக