வியாழன், 10 அக்டோபர், 2013

தின பலன் 10.10.2013

மேஷம்: 
இன்று, அவசரப் பணி ஒன்று உருவாகி, அல்லல் தரலாம். கருணை இல்லாதவரிடம் உதவி கேட்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் இருக்கும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். வாகன பயணத்தில் மித வேகம் நல்லது.
ரிஷபம்: 
இன்று, கடந்த நாட்களில் நடந்த உண்மை சம்பவத்தை, நண்பர்களிடம் பேசுவீர்கள். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகி உற்பத்தி, விற்பனை செழிக்கும். உபரி பண வருமானம் பெறுவீர்கள். விருந்து, விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.
மிதுனம்:
 இன்று, உற்சாகத்தினால் சந்தோஷ முகத்தோற்றம் பெறுவீர்கள். மனதில் இருந்த செயல்திட்டம் முழுவடிவம் பெறும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழிக்க தேவையான பணிபுரிவீர்கள். உபரி பண வருமானம் கிடைக்கும். எதிரி இடம் மாறிப்போகிற நன்னிலை உண்டு.
கடகம்:
 இன்று, கடந்த காலத்தில் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றுவதில், தாமதம் ஏற்படலாம். அவப்பெயர் வராத அளவில் செயல்பட வேண்டும். கூடுதல் உழைப்பால் தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூல நிலையை பாதுகாக்கலாம். நண்பருடன் வாகன பயணத்தில், தகுந்த கவனம் வேண்டும் .
சிம்மம்:
 இன்று, உங்கள் செயல்களை, தகுந்த பரிசீலனை செய்து நிறைவேற்றவும். எவரிடமும் பொது விவகாரம் குறித்த பேச்சு கூடாது. தொழிலில் உருவாகிற மாறுபட்ட சூழ்நிலையை கூடுதல் உழைப்பினால் சரிசெய்வது நல்லது. எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் தாமதம் இருக்கும். தியானம் தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.
கன்னி:
 இன்று, சிறு பணியையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் பாராட்டு மனதிற்கு ஊக்கம் தரும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி திட்டமிட்டபடி நிறைவேறும். உற்பத்தி, விற்பனை செழித்து, தாராள பணவரவு கிடைக்கும். நிலுவை பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள்.
துலாம்: 
இன்று, நீங்கள் நல்லதை செய்தும் மனவருத்தம் ஏற்படலாம். சமூக நிகழ்வுகளில் கொஞ்சம் விலகி செயல்படுவது சிரமம் தவிர்க்கும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேற்றுவது அவசியம். மிதமான அளவில் பணவரவு இருக்கும். உணவுப்பண்டங்கள், தரம் அறிந்து வாங்குவது நல்லது. 
விருச்சிகம்:
 இன்று, நீங்கள் வெகுநாள் எதிர்பார்த்த செயல் ஒன்றில் சாதகமான நிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். வியத்தகு அளவில் லாப விகிதம் உயரும். வீடு, வாகனத்தில் தேவையான மாற்றம் செய்வீர்கள். சுற்றுலா பயணத்திட்டம் உருவாகும்.
தனுசு: 
இன்று, சிலரது பேச்சு, உங்கள் மனதை சஞ்சலப்படுத்துவதாக அமையும். இதனால், பணிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படலாம். தொழில், வியாபார நடைமுறை சீராக, புதிய யுக்திகளை பின்பற்றுவது அவசியம். பணவரவு, சிக்கன செலவுகளுக்கு பயன்படுவதாக இருக்கும். பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.
மகரம்: 
இன்று, உங்கள் வாழ்வில் கூடுதல் வளம்பெற, அனுகூல சூழ்நிலை உருவாகும். பெரியவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றி, தகுந்த நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். உபரி பணவருமானம் கிடைக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.
கும்பம்:
 இன்று, உங்கள் மனதில் கூடுதல் அன்பும், கருணைக் குணமும் ஏற்படும். தன்னைச் சார்ந்தவர்களின் தேவைக்கு உதவுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில், புதிய பரிமாணம் ஏற்படும். பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்
மீனம்:
 இன்று, உங்களின் வெளிவட்டார தொடர்பு தொந்தரவு தருவதாக இருக்கும். சொந்தப்பணி நிறைவேற்ற, கூடுதல் கவனம் கொள்வது நல்லது. தொழில், வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். பணவரவை விட, செலவு அதிகரிக்கும். உடல் நலம் ஆரோக்கிய பலம் பெற, மருத்துவ சிகிச்சை உதவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக