தின பலன் 29.9.2013
மேஷம்:
இன்று, சிலரது குறுக்கீடுகளால், உங்களது அன்றாட பணிகளில் தாமதம் ஏற்படலாம். சமயோசிதமாக செயல்படுவது அவசியமாகும். தொழில் இலக்கு பூர்த்தியாக, அதிக கால அவசாகம் தேவைப்படும். கிடைக்கிற பணவரவுக்குள், செலவுகளை சிக்கனப்படுத்துவீர்கள். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்ணவும்.
ரிஷபம் :
இன்று, உங்கள் செயல்கள் சிறந்து, பலர் மனதில் உங்களைப் பற்றி, நல்ல எண்ணங்களை உருவாக்கும். சிறு அளவிலான உதவியும் கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சியில், கூடுதல் அக்கறை கொள்வீர்கள். சராசரி பணவரவுடன், உபரி பணவருமானமும் பெறுவீர்கள். முக்கிய தேவைக்கு பணம் சேமிப்பீர்கள்.
மிதுனம்:
இன்று, பிறரிடம் அதிக எதிர்பார்ப்புடன் செயல்படுவீர்கள். பேச்சில் கூடுதல் நிதானம் பின்பற்றுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிறு அளவிலான குளறுப ஏற்படலாம். பணவரவு குறைந்த அளவில் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒற்றுமை அவசியம்.
கடகம்:
இன்று, நீங்கள் முன்னர் செய்த உதவிகர செயல்களுக்கு, உரிய நற்பலன் தே வரும். மனதில் புதிய நம்பிக்கையுடன் அன்றாட பணியை மேற்கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். பணப்பரிவர்த்தனையில் அபிவிருத்தி உண்டு. இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.
சிம்மம்:
இன்று, உங்கள் செயல்பாடுகளில் தடுமாற்றம் ஏற்படலாம். சிறிய பணி கூட கனமாக தோன்றும். தொழில், வியாபார நடைமுறை வளர்ச்சி பெற, உங்கள் மீது அக்கறை உள்ளவர்களின் உதவி கேட்டு பெறுவீர்கள். வெளியூர் பயணத் திட்டத்தில் மாறுதல் இருக்கும். தியானம் தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.
கன்னி:
இன்று, எவரையும் மதிப்புடன் நடத்துகிற பண்பாட்டுடன் செயல்படுவீர்கள். பேச்சில் அன்பும், பரிவும் கலந்திருக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும், ராசரி பணவரவுடன், நிலுவைப் பணமும் வசூலாகும். உறவினர், புதிய சொந்தங்களை அறிமுகப்படுத்துவர்.
துலாம்:
இன்று, உங்கள் மனதில் நேர்மையும், கருணைக் குணமும் அதிகரிக்கும். நண்பர், உறவினர் அத்தியாவசியத் தேவைக்கு, இயன்ற அளவில் பணம் கொடுத்து உதவுவர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். விருந்து உபரிப்பில் கலந்து கொள்வீர்கள். புத்திரர் செயல் மனதை மகிழ்விக்கும்.
விருச்சிகம்:
இன்று, உங்களின் செயல்பாடுகளில் சிரமம் வரலாம். உறவினர், நண்பர்களின் எதிர்பார்ப்பு, உங்கள் மனதை கவலைபடச் செய்யும். தொழில், வியாபாரத்தில் உருவாகிற அனுகூல சூழ்நிலையை பயன்படுத்துவதால், சில நன்மை பெறலாம். பணவரவைக் காட்லும், புதிய இனங்களில் செலவு ஏற்படும். உணவு உண்பதில் கட்டுப்பாடு நடைமுறை அவசியம்.
தனுசு:
இன்று, உங்கள் மனதில் இனம் புரியாத, சில குழப்பம் வந்து விலகும். உங்கள் நலனில் அக்கறை உள்ளவரின் ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற, புதிய யுக்தி பயன்படுத்துவது அவசியம். எதிர்பார்த்ததை விட குறைந்த அளவில், பணவரவு கிடைக்கும். உணவு ஒவ்வாமையில் அஜீரணம், தூக்கமின்மை ஏற்படலாம்.
மகரம்:
இன்று, நீங்கள் வெகுநாள் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் வளர்ச்சி பெற தேவையான பணிபுரிவீர்கள். உபரி பணவருமானம் கிடைக்கும். குடும்பத்தின் தேவைகளை பெருமளவில் நிறைவேற்றுவீர்கள். மனதில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திருக்கும்.
கும்பம்:
இன்று, எங்கள் எண்ணத்தில் புதிய மாற்றம் ஏற்படும். தன்னை சார்ந்தவர்களுக்கு இயன்ற அளவில் உதவி புரிந்து மனம் மகிழ்வீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அனுகூல காரணி பலம் பெறும். தாராள அளவில் பணவருமானம் கிடைக்கும். விருந்தில் கலந்து கொள்ள அழைப்பு வரும்.
மீனம்:
இன்று, உங்களிடம் நன்கு பழகியவர் கூட, சந்தேக மனதுடன் பேசுவர். குடும்ப சிரமங்களை நம்பகத்தன்மை இல்லாதவரிடம் சொல்வதால், மனஅழுத்தம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் தகுந்த கவனம் கொள்வதால், பணிச்சுமை மெல்ல மெல்ல குறையும். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். எதிர்பார்த்த சுபசெய்தி வர தாமதமாகலாம்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக