தின பலன்
28.9.2013
மேஷம்:
இன்று, மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எந்த செயலிலும் உற்சாகமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சி இலக்கு திட்டமிட்டப்படி நிறைவேறும். ஆதாய பணவருமானம் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள்.
ரிஷபம் :
இன்று, செயல்களில் மேம்போக்குத் தன்மை நிறைந்திருக்கும். இதனால், அன்றாட பணியில் குளறுபடி வரலாம். தொழில் நடைமுறை சீராக, புதிய யுக்திகளை பயன்படுத்த வேண்டும். மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். உறவினர் வகையில், கூடுதல் பணச்செலவு ஏற்படலாம்.
மிதுனம்:
இன்று, வாழ்வில் புதிய நல் அனுபவங்களை பெறுவீர்கள். எதிரிகளால் இருந்த தொல்லை குறையும். தொழில் வளர்ச்சிப் பணியை, ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். நண்பருக்கு உதவும் வகையில், கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும்.
கடகம்:
இன்று, சில பணிகள் நிறைவேற தாமதமாவாதால், மன வருத்தம் கொள்வீர்கள். நியாய, தர்மம் கூடுதலாக கடைப்பிடிப்பதால் நன்மை வளரும். தொழில் வளர்ச்சி நிலை சுமாராக இருக்கும். பணவரவுக்கு மீறிய வகையில், செலவுகள் உருவாகும். தியானம், சீரான ஓய்வு உடல்நலம் பெற உதவும்.
சிம்மம்:
இன்று, பேச்சில் இனிய வார்த்தை நிறைந்திருக்கும். மாறுபட்ட கருத்து உள்ளவரும், நல் எண்ணத்துடன் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் வியத்தகு முன்னேற்றம் ஏற்படும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.
கன்னி:
இன்று, செயல்களில் சமூக நலன் பற்றிய அக்கறை அதிகரிக்கும். எவரிடமும் இனிய வார்த்தை பேசுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். உபரி பணவருமானம் கிடைக்கும். விரும்பிய உணவு வகை உண்டு மகிழ்வீர்கள். சுகமான நித்திரையும், இனிய கனவும் ஏற்படும்.
துலாம்:
இன்று, சிலர் உங்களுக்கு உதவுவது போல பாசாங்கு செய்து, பணிகளில் இடையூறு ஏற்படுத்துவர், உண்மை உணர்ந்து. அவர்களிடம் இருந்து விலகுவீர்கள். தொழில் வளர்ச்சி சீராக, பணிகளில் நேரம் தவறாமையை பின்பற்ற வேண்டும். ஓரளவு பணவரவு கிடைக்கும். சொத்து, முக்கிய ஆவணம் பிறர் பொறுப்பில் தரக்கூடாது.
விருச்சிகம்:
இன்று, உங்களிடம் பழகிய ஒருவர், அவமதிக்கும் நோக்கத்துடன் செயல்படுவார், இதை உணராமல் அவர்களிடம் சொந்த விஷயம் பேசக் கூடாது. தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உருவாக கூடுதல் நேரம் பணிபுரிய நேரிடலாம். காலமுறை உணவுப் பழக்கம் உடல்நலம் காக்க உதவும். அவசியமற்ற வெளியூர் பயணத்தை தவிர்ப்பதால் நேரமும், பணமும் மிச்சமாகும்.
தனுசு:
இன்று, நண்பர்களின் உதவி, பாசத்தினால் மனம் நெகிழ்வீர்கள். அன்றாட பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரம் வளர கூடுதல் மூலதனம் செய்வீர்கள். உற்பத்தி விற்பனை சிறந்து தாராள பணவரவைத் தரும், ஆடை, ஆபரணச் சேர்க்கை பெறலாம்.
மகரம்:
இன்று, உங்களுக்கு அனுசரணையாக செயல்படுபவர்களின் எண்ணிக்கை உயரும். மனதிலும் செயலிலும் புத்துணர்வு பெறுவீர்கள். தொழில், வியாபார நடைமுறை சிறப்பாக இருக்கும். அரசு அதிகாரிகளின் உதவி பெற அனுகூலம் உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.
கும்பம்:
இன்று, எதிர்பாராத வகையில் அவசரப்பணி ஒன்று ஏற்பட்டு தொந்தரவு செய்யலாம், மனதில் கூடுதல் நம்பிக்கையுடன் செயல்படுவது அவசியம். சக தொழில் சார்ந்த நண்பரின் உதவியால், தொழில் நிலை சீராகும். பணவரவு குறைந்த அளவில் கிடைக்கும் உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு நல்லது.
மீனம்:
இன்று, சிலர் சுய லாபத்திற்காக, உங்களுக்கு பணம் கடனாக தர முயற்சிப்பர், முக்கிய செலவு எதுவுமின்றி, தேவையற்ற வகையில் பணம் பெற வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிக உழைப்பு உதவும். உறவினர்களிடம் பேசுவதில் நிதான அணுகுமுறை நல்லது. சீரான ஓய்வு உடல்நலம் காக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக