புதன், 9 அக்டோபர், 2013

தின பலன் 9.10.2013

மேஷம்: 
சந்திராஷ்டமம் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். யதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் உயரதிகாரிகளுடன் விவாதம் வந்து நீங்கும். 
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, ரோஸ்


ரிஷபம்:
புது முயற்சிகள் வெற்றியடையும். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டரிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். 
அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிரே


மிதுனம்: 
இன்றைய தினம் வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத் தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கணவன் - மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சகோதரவகையில் நன்மை பிறக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். 
அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

 
கடகம்: 
குழப்பத்திலிருந்த நீங்கள் இன்று திட்டவட்டமான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்வீர்கள். சொந்தம் - பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கையில் காசு பணம் தேவையான அளவு இருக்கும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். வாகனச் செலவுகள் குறையும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். 
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, நீலம்


 சிம்மம்: 
இன்றைய தினம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய கடனை பைசல் செய்யுமளவிற்கு பணவரவு உண்டு. குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாயின் உடல் நிலை சீராகும். சகோதரவகையில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும். 
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, மயில் நீலம்
 


கன்னி: 
திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க் கைத் துணையின் ஆதவு கிட்டும். கையில் காசு பணம் புரளும். தலைச்சுற்றல், வயிற்றுவலி நீங்கும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். 
அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், மஞ்சள்

  

துலாம்: 
மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சொந்தம் - பந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். முன்கோபம் விலகும். அரசுப்பணிகள் சுமுகமாக முடியும். வாகனச்செலவு விலகும். வேற்று மதத்தினரால் ஆதரவு கிட்டும். அண்டை வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். 
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், ப்ரவுன்



விருச்சிகம்:
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து விலகும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். நன்றி மறந்த சிலரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் அதிருப்தி அடைவார்கள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், இளஞ்சிவப்பு

  
தனுசு: 
கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ப்ரவுன்


மகரம்:
வியாபாரத்தில் அதிரடி முடிவுகளை எடுத்து போட்டியாளர்களை அதிரச் செய்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சனைகளுக்கு மாற்றுவழி காண்பீர்கள். வெளியூரிலிருந்து நற்செய்திகள் வந்துசேரும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை மேலதிகாரி புரிந்து கொள்வார்கள். வாகனப்பழுது நீங்கும். 
அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பிங்க்


கும்பம்:
இன்றையதினம் பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்திலுள்ளவர்களிடம் மனம் விட்டுப்பேசுவீர்கள். தாயின் உடல் நிலை சீராக இருக்கும். சகோதர, சகோதரிகளால் உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உதியோகத்தில் பணிகளை விறைந்து முடிப்பீர்கள். 
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ப்ரவுன்


மீனம்: 
தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். கடனை பைசல் செய்வீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை வாசூலிப்பீர்கள். அம்மாவின் உடல் நிலை சீராக அமையும். பயணங்களால் ஆதாயம் உண்டு. 
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை

செவ்வாய், 8 அக்டோபர், 2013

தின பலன் 8.10.2013

மேஷம்: 
ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. மறைமுகப் போட்டி களுக்கு பதிலடி தருவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதயம் உண்டு. விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு. பிரபங்களின் உதவி கிடைக்கும். கண் எரிச்சல், தூக்கமின்மை நீங்கும். அக்கம் - பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர் மஞ்சள், ப்ரவுன்

ரிஷபம்:
சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவதன் மூலம் காரியங்கள் வெற்றியடையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதவகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். பிராத்தனைகளை நிறைவேற்றுகள். கன்னிப்பெண்களுக்கு உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும்.                                  
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ் பச்சை, வெள்ளை

மிதுனம்: 
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் ஒத்துழைப்பார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். முகப் பொலிவு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதர வகையில் நன்மை கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். 
அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
 

கடகம்: 

வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மகிழ்ச்சி கிட்டும். தாயாரின் உடல் நிலை சீராகும். கணவன் - மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர்செய்வீர்கள். அரசாங்க காரியங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். 
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, ரோஸ்

 சிம்மம்: 
 
மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென நினைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். 
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிரே

கன்னி: 
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பதறாமல் பக்குவமாக செயல்படப்பாருங்கள். பல வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். நண்பர், உறவினர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். உங்கள் திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். 
அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
  

துலாம்: 
இன்றையதினம் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். சொந்த - பந்தங்களால் பிரச்னைகள் வரக்கூடும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. 
அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, நீலம்


விருச்சிகம்:
சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். 
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, மயில் நீலம்
  
தனுசு: 
கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். உயரதிகாரி ஆதரிப்பார். நட்பு வட்டம் விரியும். தாழ்வு மனப்பான்மை நீங்கும். 
அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், மஞ்சள்

மகரம்:
பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் விலகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். 
அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, பழுப்பு

கும்பம்:
பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தொந்தரவுகள் வந்து நீங்கும். 
அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், ப்ரவுன்

மீனம்: 
குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். சகோதர வகையில் நன்மை கிட்டும். நவீன மின்னலை சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய கடன் தீரும். வெளிவட்டாரத்தில் கௌரவம் கிட்டும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். 
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், இளஞ்சிவப்பு

சனி, 5 அக்டோபர், 2013

தின பலன் 5.10.2013

மேஷம்: 
இன்று, உங்களின் நற்செயலால், பலரிடமும் நன்மதிப்பை பெறுவீர்கள். மனதில் தெய்வ நம்பிக்கை வளரும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்கும்.
 

ரிஷபம்:
 இன்று, நீங்கள் நல்லவரையும், சந்தேக மனதுடன் பார்க்கும் இக்கட்டான சூழ்நிலை ஏற்படலாம். பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் இருக்கும். செலவுகளில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். வெளியூர் பயணத்திட்டத்தில், மாறுதல் இருக்கும்.

மிதுனம்: 

 இன்று, உங்கள் பணி நிறைவேற, முன் யோசனையுடன் செயல்படுவது நல்லது. பொது இடங்களில், அதிகநேரம் எவருடனும் பேச வேண்டாம். தொழில்,வியாபார நடைமுறை சீராக புதிய அணுகுமுறை பின்பற்றுவது அவசியம். உடல்நலத்திற்கு சிறு அளவிலான, மருத்துவ சிகிச்சை தேவைப்படும். குடும்ப உறுப்பினர், நல்அன்பு பாராட்டுவர்.
 
கடகம்: 

இன்று, உத்வேகமுடன் செயல்படுவீர்கள். பணிகள் நிறைவேற, பூர்வ புண்ணிய நற்பலன் துணை நிற்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை வியத்தகு முன்னேற்றம் பெறும். தாராள பணவரவு கிடைக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.
 
சிம்மம்: 
 
இன்று, உங்கள் பார்வையில் சமூக நிகழ்வுகள், மன சஞ்சலம் தருவதாக இருக்கும். சொந்தப் பணியை நிறைவேற்ற முயற்சிப்பதால், சிந்தனையில் நல்ல மாற்றம் உருவாகும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

கன்னி: 
  இன்று, நீங்கள் புதிய பாதையில் நடை போடுவீர்கள். பெற்றோரின் ஆலோசனை, நல் வழி நடத்தும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி,விற்பனை சிறந்து வாழ்க்கை தரம் உயரும். உபரி பண வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.

துலாம்: 
இன்று, உங்கள் மனதில் ஆன்மிக நம்பிக்கை அதிகரிக்கும். அடுத்தவர் விவகாரத்தில், கருத்து சொல்ல தயங்குவீர்கள். தொழில், வியாபாரத்தில் நிறைவேற்ற வேண்டிய பணிகளை கூடுதல் உழைப்பால் பூர்த்தி செய்வீர்கள்.

விருச்சிகம்:
  இன்று, உங்கள் செயல்களில் அதிக நேர்த்தி நிறைந்திருக்கும். சமூகத்தில் நல்ல வரவேற்பு பெறுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சிப் பணி, இனிய அனுபவம் தரும். உபரி பணவருமானம் கிடைக்கும். வீட்டுக்கு தேவையான முக்கிய பொருட்களை வாங்குவீர்கள்.

தனுசு: 
இன்று, பொதுநலப் பணிபுரிவதில் ஆர்வம் கொள்வீர்கள். சமூகத்தில் உங்களைப் பற்றிய நல்ல மதிப்பீடு வளரும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். அழகு சாதனப் பொருட்களை விரும்பி பயன்படுத்துவீர்கள்.

மகரம்:
இன்று, உங்கள் செயல் நிறைவேறுவதை தடுக்க, சிலர் முயற்சி செய்வர். புதிய முயற்சியை பின் ஒரு நன்நாளில் துவக்கலாம். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட தன்மை இருக்கும். புதிய இனங்களில், தவிர்க்க இயலாத வகையில் பணச்செலவு ஏற்படும். தகுந்த ஓய்வு எடுப்பதால், உடல்நல ஆரோக்கியம் சீராகும்.

கும்பம்:
 இன்று, உங்களுக்கு அதிக வேளைப்பளுவால், மன சஞ்சலம் உருவாகும். சூழ்நிலையில் தாக்கம் உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உருவாகிற குளறுபடியை சரி செய்வீர்கள். ஒவ்வாத உணவு வகை உண்ண வேண்டாம். மாணவர்கள், கூடுதல் கவனத்துடன் படிப்பதால் தர தேர்ச்சி சீராகும்.

மீனம்: 
இன்று, உங்களின் முயற்சிக்கு உரிய பலன் கிடைக்கும். நண்பர், உறவினர் உங்களின் தனித்திறமையை பாராட்டுவர். தொழில்,வியாபாரத்தில் வளர்ச்சியில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும். இயன்ற அளவில், அறப்பணி செய்து மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு, அரசு தொடர்பான உதவி பெற அனுகூலம் ஏற்படும்.

வெள்ளி, 4 அக்டோபர், 2013

தின பலன் 4.10.2013

மேஷம்: 
 இன்று, மனதில் தன்மான உணர்வு அதிகரிக்கும். வாழ்வின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள காரணிகளை, புதிய யுக்தியுடன் சரி செய்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சி திருப்திகரமாகும். சராசரி பணவரவுடன், நிலுவைப் பணம் வசூலாகும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். 

ரிஷபம்:
இன்று, உங்கள் நற்செயலை, சிலர் பரிகாசம் செய்து பேசுவர். மனதில், கூடுதல் நம்பிக்கையுடன் செயல்படுவது அவசியமாகும். தொழில், வியாபாரம் செழிக்க, புதிய யுக்தி பின்பற்றுவீர்கள். சராசரி பணவரவு கிடைக்கும். வீடு, வாகன வகையில் பராமரிப்பு பணி தேவைப்படும்.

மிதுனம்: 
 இன்று, உங்களின் வெளிவட்டார தொடர்பு தொந்தரவு தரலாம். செயல்களில் கூடுதல் பொறுப்புணர்வு பின்பற்றுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம், அதிக உழைப்பு என்ற நடைமுறையை பின்பற்றுவீர்கள். சராசரி பணவரவு கிடைக்கும். அதிக விலையுள்ள பொருள் இரவல் கொடுக்க, வாங்க கூடாது.
கடகம்: 
 இன்று, சிலரிடம் கேட்ட உதவி கிடைக்கும். மனதில் கூடுதல் நம்பிக்கை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி பரிமாணம் ஏற்படும். வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள். எதிர்கால தேவைக்கு கொஞ்சம் பணம் சேமிப்பீர்கள்.

சிம்மம்: 
 இன்று, உங்களின் கடந்தகால சிரமம் பற்றி, பிறரிடம் சொல்லவேண்டாம். தெய்வ அனுகூலத்தினால் நன்மை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்தநிலை ஓரளவு சீராகும். அளவான பணவரவு கிடைக்கும். தவிர்க்க இயலாத வகையில், புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படலாம்.

கன்னி: 
 இன்று, உங்களின் பணிகளை ஆர்வமுடன் செயல்படுத்துவீர்கள். பிறரது பார்வையில், உங்கள் மீதான மதிப்பீடு உயரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி திட்டமிட்டபடி நிறைவேறும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். ஆன்மிக சுற்றுலா பயணத்திட்டம் உருவாகும்.

துலாம்: 
 இன்று, உங்கள் மனதிலும், செயலிலும் சோம்பல் குணத்தின் வெளிப்பாடு இருக்கும். வாழ்வியல் நடைமுறை தேவைகளை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சராசரி உற்பத்தி, விற்பனை பெற கூடுதல் உதவும். உறவினர் வகையில் சீர்முறை செய்ய, கூடுதல் பணம் தேவைப்படும்.

விருச்சிகம்:
 இன்று, அதிக மதி நுட்பத்துடன் செயல்படுவீர்கள். உழைப்பிற்கான பலன் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். தாராள பணவருமானம் கிடைக்கும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெறுவீர்கள். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகைப்பயன் கிடைக்கும்.

தனுசு: 
இன்று, சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். புதியவர் நல் அன்பு பாராட்டுவர். தொழில் வளர்ச்சி மனதில் திருப்தி தரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.

மகரம்:
இன்று, உங்களிடம் எதிர் மனப்பாங்குடன் பேசுவரிடம் விலகுவதால் சிரமம் தவிர்க்கலாம். வாக்குறுதி நிறைவேற்றுவதில் தாமதம் இருக்கும். தொழி்ல், வியாபாரம் முன்னேற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவது நல்லது. குறைந்த அளவில் பணவரவு இருக்கும். உடல் நலம் ஆரோக்கியம் பெற, சத்தான உணவு வகை உண்பது அவசியம்.

கும்பம்:
இன்று, சங்கடமான சூழ்நிலை ஏற்படலாம். மனசாட்சிக்கு முக்கியத்துவம் தந்து செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி கூடுதல் உழைப்பு உதவும். முக்கிய செலவுகளுக்காக, கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். தாயின் ஆறுதல் வார்த்தை, மனதிற்கு புதிய நம்பிக்கை தரும்.

மீனம்: 
 இன்று, உங்கள் நண்பர்களில் ஒருவர், உதவி பெற முயற்சிப்பார். இயன்ற அளவில் உதவி, நட்பை வளர்ப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழிக்க நில நடைமுறை மாற்றம் செய்வீர்கள். விருந்து உபசரிப்பில் கலந்து கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு, எதிர்பார்த்த பதவி கிடைக்க அனுகூலம் வளரும்.

வியாழன், 3 அக்டோபர், 2013

தின பலன் 3.10.2013

மேஷம்: 
இன்று, கூடுதல் வேலைப்பளு ஏற்படலாம். பணிகளின் முக்கியத்துவம் உணர்ந்து செயல்பட வேண்டும். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூல நடைமுறையை, பிறரிடம் சொல்ல வேண்டாம். அதிக பயன் தராத பொருள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம்.


ரிஷபம்:
இன்று, உங்கள் பேச்சில் தேவையான நிதானம் பின்பற்றுவது அவசியம். போட், பந்தயத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற, தேவையான பணிகளை நிறைவேற்றுவதால் நன்மை உண்டு. வாகன பயணத்தில் மிதவேகம் பி"ன்பற்றவும். அரசியல்வாதிகள் விவகாரங்களில், சரி செய்யும் முயற்சியில் கூடுதல் கவனம் தேவை.

மிதுனம்: 
இன்று, உங்கள் எண்ணமும், செயலும் புதிய உற்சாகம் பெறும். நிலுவைப் பணியை சுறுசுறுப்பாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் அதிக முன்னேற்றம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். நித்திரையில் ஆன்மிகம் தொடர்பான கவன வரும்.
 
கடகம்: 
இன்று, சிலர் உங்களுக்கு தந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படும். புதிய பணிகளை பின், ஒருநாளில் துவங்கலாம். தொழில், வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். வாகன பயணத்தில் மித வேகம் நல்லது. தம்பதியர் குடும்ப சூழ்நிலை உணர்ந்து செயல்படுவர்.

சிம்மம்: 
இன்று, உங்களின் அறிவுத் திறமையை பயன்படுத்தி, சில நன்மை பெறுவீர்கள். சமூகத்தில் கூடுதல் மதிப்பு, மரியாதை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். குடும்பத் தேவையை பெருமளவில் பூர்த்தி செய்வீர்கள். இஷ்ட தெய்வ அருள் பலம் துணை நிற்கும்.

கன்னி: 
 இன்று, உங்கள் உறவினர் ஒருவரின் அதிக பாசம் வியப்பைத் தரும். அவர்களி"ன் செயலை விமர்சனம் செய்ய வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இடையூறு சரி செய்வதால், உற்பத்தி, விற்பனை சீராகும். சராசரி அளவில் பணம் கிடைக்கும். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும்.

துலாம்: 
 இன்று, பிறர் நலத்தில் அதிக அக்கறை கொள்வீர்கள். தெய்வ அருளால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை அதிகரிக்கும். ஆதாய பணவருமானம் கிடைக்கும். குடும்பத் தேவை பெருமளவில் பூர்த்தியாகும். அதிகாரிகளுக்கு பாராட்டு, வெகுமதி கிடைக்கும்.

விருச்சிகம்:
 இன்று, உங்கள் நண்பரின் உதவியால், சில நன்மை பெறுவீர்கள். மனதில் நம்பிக்கை அதிகரி"க்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட் குறையும். உற்பத்தி, விற்பனை சிறந்து, தாராள பணவரவு கிடைக்கும். புத்திரரின் பப்பு, வாழ்வு சிறக்க தேவையான ஏற்பாடுகளை செய்வீர்கள்.

தனுசு: 
 இன்று, உங்கள் செயல்களில் குளறுப ஏற்படலாம். உங்கள் நலம் விரும்புபவரின், ஆலோசனை பெற்று செயல்படுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் இருந்த மந்த நிலை சரியாகும். எதிர்பார்த்த அளவில் பணவரவு கிடைக்கும். விற்பனையாளரின் பகட்டான பேச்சை நம்பி, அதிக பயன் தராத பொருள் வாங்க வேண்டாம்.

மகரம்:
இன்று, சிறிய பணிகளுக்கும் அதிக முயற்சி தேவைப்படலாம். சான்றோரின் ஆலோசனை கேட்டு நடப்பதால், எதிர்பார்த்த நன்மை பெறலாம். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் இருக்கும். முக்கிய தேவைக்கு கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். வாகன பயணத்தில் மிதவேகம் பி"னபற்றுவது நல்லது.

கும்பம்:
இன்று, எந்த செயலிலும் முன்யோசனையுடன் செயல்படுவீர்கள். பணி சிறந்து, உரிய பாராட்டை பெற்றுத் தரும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழித்து, வாழ்வில் புதிய நம்பிக்கை கொள்வீர்கள். இயன்ற அளவில் அறப்பணி செய்து மகிழ்வீர்கள். தந்தைவழி உறவினர்களிடம் இரு"நத மனக்கிலேசம் விலகும்.

மீனம்: 
 இன்று, உங்கள் செயலில் அதிக மன உறுதி பின்பற்றுவீர்கள். முயற்சிக்கு உரிய பலன், முழுமையாக வந்து சேரும். தொழில், வியாபாரம் செழிக்க, அனுகூல காரணி பலம் பெறும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்கி மகிழ்வீர்கள். இல்லறத் துணை கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார்.

புதன், 2 அக்டோபர், 2013

தின பலன் 2.10.2013

மேஷம்: 
இன்று, உங்களின் பொறுப்பான செயல் சிலரால் தவறாக விமர்சிக்கப்படலாம். அமைதி மனப்பாங்குடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அளவான பணவரவு கிடைக்கும். நண்பர் வாங்கும் பொருளுக்கு, நீங்கள் பேரம் பேசுவதால் அதிருப்தி ஏற்படலாம்.

ரிஷபம்:
இன்று, உங்கள் குடும்ப பெரியவர்களின் சொல்லுக்கு, உரிய மரியாதை தருவது அவசியம். திட்டமிட்ட பணி மட்டுமே, தகுந்த வெற்றி இலக்கை அடையும். சகதொழில், வியாபாரம் சார்ந்தவர்களிடம் மனக்கிலேசம் வராத அளவிற்கு நடந்து கொள்வது நல்லது. பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

மிதுனம்: 
 இன்று, முன்னர் உங்கள் பணியில் இடையூறாக செயல்பட்டவர், விலகிப்போகிற நன்னிலை உண்டு. நடைமுறை வாழ்வில் சில மாற்றங்களை பி"னபற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். கூடுதல் சொத்து சேர்க்கை பெறுவீர்கள். உறவினர் இல்ல சுபநிகழ்ச்சியில், கலந்து கொள்ள அழைப்பு வரும்.

கடகம்: 
இன்று, உங்கள் வாழ்வியல் நடைமுறையில் உள்ள சிரமம் பற்றி, பிறரிடம் சொல்ல வேண்டாம். இஷ்ட தெய்வ அருளால், நன்மை தருகிற மாற்றம் உருவாகும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனையில் சிறிது சுணக்க நிலை இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு ஊட்டம் தரும் உணவு உண்பது நல்லது.

சிம்மம்: 
 இன்று, நண்பரிடம் முன்னர் பெற்ற உதவிக்கு, நன்றி பாராட்டும் வகையில் செயல்படுவீர்கள். மனதில் இருந்த கவலை விலகும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சீராகும். பணப்பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். முக்கிய வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள்.இல்லறத் துணையின் அன்பில் மகிழ்வீர்கள்.

கன்னி: 
இன்று, உங்களின் முக்கியமான காரியத்தை பிறர் பொறுப்பில் தரக்கூடாது. ஆரவாரம் தவிர்ப்பதால், முயற்சி சீராக நிறைவேறும். தொழில், வியாபாரத்தி"ல் முன்னேற்றம் பெற அதிக உழைப்பு அவசியமாகும். குறைந்த அளவில் பணம் கிடைக்கும். இயந்திர தொழிற்சாலை பணியாளர்கள், கூடுதல் பாதுகாப்பு நடைமுறை பின்பற்ற வேண்டும்.

துலாம்: 
 இன்று, மனதில் புதிய சிந்தனை பிறக்கும். பலநாள் திட்டமிட்ட செயலை, நேர்த்தியுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிபெற முக்கியஸ்தரின் உதவி கிடைக்கும். உற்பத்தி, விற்பனை அதிகரித்து தாராள பணவரவு பெறுவீர்கள். இல்லறத் துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பணியாளர்களுக்கு சலுகைப் பயன் கிடைக்கும்.

விருச்சிகம்:
இன்று, உங்கள் குடும்ப உறுப்பினர்கள், அதிக பாசத்துடன் நடந்து கொள்வர். முக்கியப் பணி எளிதாக நிறைவேறும் தொழில், வியாபார வளர்ச்சியில் அபிவிருத்தி ஏற்படும். சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். உத்தியோகஸ்தர் சிறந்த பணிக்காக பாராட்டு வெகுமதி பெறுவர்.

தனுசு: 
இன்று, நீங்கள் அறிமுகம் இல்லாத எவரிடமும், பொது விஷயம் பேச வேண்டாம். சொந்தப் பணியில் தகுந்த ஆர்வம் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற்ற தாமதமாகும். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்பதால், உடல்நல ஆரோக்கியம் சீராகும்.

மகரம்:
இன்று, உங்களுக்கு மறைமுகமாக இடையூறு செய்பவரை அடையாளம் காண்பீர்கள். அவர் சொல்லுக்கு எதிர் கருத்து தெரிவிக்காமல், பெருந்தன்மையுடன் விலகுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவாகிற மாறுபட்ட சூழ்நிலையை சரிசெய்ய, கூடுதல் அவகாசம் தேவைப்படும். சராசரி பணவரவு கிடைக்கும். தியானம், தெய்வ வழிபாடு செய்து மன அமைதி பெறுவீர்கள்.

கும்பம்:
 இன்று, கடந்த காலத்தில் நீங்கள் செய்த நல்ல பணி ஒன்றுக்கு, உரிய பலன் தே வரும். எதிர்கால வாழ்வில் புதிய நம்பிக்கை கொள்வீர்கள். தொழில், வியாபார இலக்கு எளிதாக நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். புத்திரர் பப்பில் முன்னேற, தேவையான உதவி வழங்குவீர்கள்.

மீனம்: 
 இன்று, உங்கள் மனதில் உற்சாகமும், செயல்களில் சுறுசுறுப்பும் நிறைந்திருக்கும். குடும்ப உறுப்பினர்களின் வாழ்த்துக்களுடன், சிறப்பான பணி ஒன்றை துவங்குவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த போட் குறையும். சராசரி பணவரவுடன் நிலுவைப் பணம் வசூலாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகி, பதவி பெற வாய்ப்பு வரும்.

செவ்வாய், 1 அக்டோபர், 2013


தின பலன் 1.10.2013

மேஷம்: 

இன்று, எவருடனும் பேசுவதில் நிதானம் பின்பற்ற வேண்டும். இதனால், கருத்து வேறுபாடு வராமல் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் தேவையான நடைமுறை மாற்றங்களை, அளவான பணச்செலவில் நிறைவேற்றுவது நல்லது. குடும்பத் தேவைக்கு சேமிப்பு பணம் பயன்படும். உணவுப் பொருள் தரம் அறிந்து உண்ணவும்.

ரிஷபம்:

இன்று, உங்கள் செயல்களில் நியாய, தர்மத்தை அதிகம் பின்பற்றுவீர்கள். இஷ்ட தெய்வ அருள் பலம் துணை நின்று உதவும். தொழில், வியாபார வளர்ச்சியில், புதிய பரிமாணம் ஏற்படும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். சந்திக்க நினைத்த நண்பர், உங்களை தேடி வருவார்.

மிதுனம்: 

இன்று, நீங்கள் தொடர்பில்லாத பணி ஒன்றில் ஈடுபட நேரலாம். குடும்ப உறுப்பினர், நிறைவேற்ற வேண்டிய பணிகளின் முக்கியத்துவம் உணர்த்துவர். தொழில், வியாபார நடைமுறையில் ஆரவாரத் தன்மை கூடாது. எதிர்பார்த்த பணவரவு, கூடுதல் முயற்சியால் கிடைக்கும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு வகை உண்ண வேண்டாம்.

கடகம்: 

இன்று, கருணை நிறைந்த மனதுடன் செயல்படுவீர்கள். பிறர் உங்களை வித்தியாச கோணத்தில் மதிப்பிடுவர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற, தேவையான மாற்றம் பின்பற்றுவீர்கள். தாய்வழி உறவினர், கூடுதல் அன்பு பாராட்டுவர். உத்தியோகஸ்தர்கள் பெற வேண்டிய சலுகைப் பயன் எளிதில் கிடைக்கும்.

சிம்மம்: 

இன்று, உங்களைச் சுற்றி நடக்கிற நிகழ்வுகளால், மனதில் அதிருப்தி ஏற்படலாம். எவரிடமும் பயன் அறிந்து பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேற்ற, கூடுதல் அக்கறை கொள்வீர்கள். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கன்னி: 

இன்று, சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். முன்னர் அவமதித்து பேசிய சிலர், உங்களின் மென்மையான குணம் உணர்ந்து அன்பு பாராட்டுவர். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். வெகுநாள் தேடிய பொருள் கைவந்து சேரும். விருந்து, விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள்.

துலாம்: 

இன்று, உங்கள் பணிகளில், அன்பை பிரதானப்படுத்தி செயல்படுவீர்கள். எதிர்பார்த்ததை விட, அதிக நற்பலன் கிடைக்கும. தொழில், வியாபார வளர்ச்சியில் வியத்தகு முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் லாப விகிதம் அதிகரிக்கும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்:

இன்று, நீங்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த தாமத செயலில், புதிய திருப்பம் ஏற்படும். உண்மை நிலை அறிந்து, மாற்று நடவடிக்கை பின்பற்றுவது நன்மை பெற உதவும். தொழில், வியாபாரத்தில் உள்ள மந்த நிலையை சரி செய்வீர்கள். போக்குவரத்தில் கவன நடை நல்லது. தியானம், தெய்வ வழிபாடு நன்மை பெற உதவும்.

தனுசு: 

இன்று, மனதில் இனம் புரியாத வருத்தம் ஏற்படலாம். உங்கள் நலம் விரும்புவோரின் உதவியும், ஊக்கமும் நல்வழி நடத்தும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை இலக்கை அடைய கூடுதல் பணிபுரிவீர்கள். சொத்து ஆவணம் பராமரி“ப்பதில், தகுந்த பாதுகாப்பு நடைமுறை பின்பற்ற வேண்டும். 

மகரம்:

இன்று, உங்கள் மனதில் ஞான சிந்தனை அதிகரிக்கும். செயல்களில் கூடுதல் வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திருப்திகரமான வகையில், வளர்ச்சி பரிமாணம் ஏற்படும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கும்பம்:

இன்று, உங்களின் தகுதி, திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். எதிரி இடம் மாறிப்போகிற நன்னிலை உண்டு. தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். நிலுவை பணக்கடனில், ஒரு பகுதி செலுத்துவீர்கள். உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும்.

மீனம்: 

இன்று, மனதில் சிலரைப் பற்றிய நம்பிக்கையில் மாற்றம் கொள்வீர்கள். சொந்தப் பணியில் பொறுப்புணர்வுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உழைப்பிற்கு தகுந்த பலன் கிடைக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறை பின்பற்றுவது நல்லது. தகுந்த ஓய்வு, உடல் நலம் பெற உதவும்.