செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

இன்றைய ராசி பலன், தின பலன் (பிப்ரவரி 4.2.2014)

மேஷம்:
இன்றையதினம் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், இளஞ்சிவப்பு

ரிஷபம்:
சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர் கள். மனதிற்குப்பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டு. முன்கோபத்தைத் தவிர்ப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். வாகனத்திலிருந்து வந்த பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

மிதுனம்:

இன்றைய தினம் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். உடல் நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். பிரபலங்களைச் சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மகிழ்ச்சியுண்டு. அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பிங்க்

கடகம்:
இரண்டு மூன்று நாட்களாக தடைபட்டுவந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். சொந்தம்-பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ப்ரவுன்

சிம்மம்:
சந்திராஷ்டமம் நீடிப்பதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை

கன்னி:
வீண்செலவுகளை தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்பவருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் தேவையறிந்து உதவுவீர்கள். முன் கோபம் குறையும். தந்தையின் உடல் நிலை சீராகும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்

துலாம்:
இன்றைய தினம் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். கையில் காசு பணம் தேவையான அளவு இருக்கும். சகோதரவகையில் மகிழ்ச்சி தங்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஆரஞ்சு

விருச்சிகம்:
எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. வெளிவட்டாத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மஞ்சள்

தனுசு:
திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வேற்று மதத்தினரால் நன்மைக் கிட்டும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகும். தாயாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா

மகரம்:
சவால்கள், ஏமாற்றங்களைத் தாண்டி வெற்றிஅடைவீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். பழைய கடனையை பைசல் செய்யும் அளவிற்கு பணவரவு உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வீண் டென்ஷன், அலைச்சல் நீங்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், கருநீலம்

கும்பம்:
வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினரு டன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைசுமை குறையும். உடன்பிறந்தவர்களின் அதரவு கிட்டும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் குறையும். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். நட்பு வட்டாரம் விரியும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிரே

மீனம்:
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். உங்கள் வாயை சிலர் கிளறி வேடிக்கைப் பார்ப்பார்கள். அதிகம் பேச வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, மஞ்சள்


http://www.multiinfomatrimonial.com/

1 கருத்து:

  1. The King Casino | Get your exclusive 50 Free Spins No Deposit!
    Experience the thrill of the 샌즈카지노 King Casino with the 더킹카지노 King online casino game ➤ Get 50 Free Spins No leovegas Deposit Bonus ✓ Free Spins ✓ Instant Play!

    பதிலளிநீக்கு