இன்றைய ராசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இன்றைய ராசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 பிப்ரவரி, 2014

இன்றைய ராசி பலன், தின பலன் (பிப்ரவரி 3.2.2014)


மேஷம்:
மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துப் போகும். பிள்ளைகளால் 
டென்ஷன் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உடல் அசதி
சோர்வு வந்துப் போகும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் 
வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் 
மோதல்கள் வேண்டாமே. அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே

ரிஷபம்:
இன்றைய தினம் வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு 
அதிகரிக்கும். வெளிவட்டாரத் தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் 
உருவாகும். கணவன்- மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். பணவரவு திருப்திகரமாக 
இருக்கும். சகோதரவகையில் நன்மை பிறக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் 
ஆதரவு கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். அதிர்ஷ்ட எண் : 6 
அதிர்ஷ்ட நிறங்கள்ரோஸ், கிளிப் பச்சை

மிதுனம்:
குழப்பத்திலிருந்த நீங்கள் இன்று திட்டவட்டமான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் 
கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசனை 
செய்வீர்கள். சொந்தம்-பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கையில் காசு பணம் 
தேவையான அளவு இருக்கும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். வாகனச் செலவுகள் 
குறையும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 4 
அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர் மஞ்சள், ப்ரவுன்

கடகம்:
இன்றைய தினம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய கடனை பைசல் செய்யுமளவிற்கு பணவரவு உண்டு. குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்தாயின் உடல் நிலை சீராகும். சகோதரவகையில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும். அதிர்ஷ்ட எண் : 7 
அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ் பச்சை, வெள்ளை

சிம்மம்:
சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும்
கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. முக்கிய கோப்புகளை 
கையாளும் போது அலட்சியம் வேண்டாம். மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் 
வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி 
அடைவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். அதிர்ஷ்ட எண் : 9 
அதிர்ஷ்ட நிறங்கள் : அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

கன்னி:
திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் அமைதி 
நிலவும். வாழ்க் கைத் துணையின் ஆதரவு கிட்டும். கையில் காசு பணம் புரளும்
தலைச்சுற்றல், வயிற்றுவலி நீங்கும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும்
பயணங்கள் திருப்திகரமாக அமையும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். தாய்வழி 
உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்
அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, ரோஸ்

துலாம்:
மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் 
அன்யோன்யம் பிறக்கும். சொந்தம்-பந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும்
உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். முன்கோபம் விலகும். அரசுப்பணிகள் சுமுகமாக 
முடியும். வாகனச்செலவு விலகும். வேற்று மதத்தினரால் ஆதரவு கிட்டும். அண்டை 
வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண் : 3 
அதிர்ஷ்ட நிறங்கள்ப்ரவுன், கிரே

விருச்சிகம்:
வியாபாரத்தில் அதிரடி முடிவுகளை எடுத்து போட்டியாளர் களை அதிரச் செய்வீர்கள்
குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நட்பு 
வட்டாரம் விரியும். கடன் பிரச்சனைகளுக்கு மாற்றுவழி காண்பீர்கள். வெளியூரிலிருந்து 
நற்செய்திகள் வந்துசேரும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை மேலதிகாரி புரிந்து 
கொள்வார்கள். வாகனப்பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண் : 1 
அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

தனுசு:
இன்றையதினம் பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்திலுள்ளவர்களிடம் மனம் 
விட்டுப்பேசுவீர்கள். தாயின் உடல் நிலை சீராக இருக்கும். சகோதர, சகோதரிகளால் 
உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத்தில் 
மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உதியோகத்தில் 
பணிகளை விறைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 3 
அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளைநீலம்

மகரம்:
தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். கடனை 
பைசல் செய்வீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் மகிழ்ச்சி 
தங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை வாசூலிப்பீர்கள். அம்மாவின் உடல் நிலை சீராக 
அமையும். பயணங்களால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட எண் : 5 
அதிர்ஷ்ட நிறங்கள்சில்வர் கிரே, மயில் நீலம்

கும்பம்:
மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்
கணவன்-மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும்
பணப்பற்றாக்குறை நீங்கும். அரசுக் கரியங்களில்ம் அனுகூலமான நிலை காணப்படும்
பிள்ளைகளின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் பரபரப்பான சூழல் ஏற்படும்
வேலையாட்களின் ஆதரவு கிட்டும். அதிர்ஷ்ட எண் : 2 
அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன்மஞ்சள்

மீனம்:
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் 
சண்டை, சச்சரவு வந்துப் போகும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை 
பயன்படுத்துவது நல்லது. தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள்
வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை 
வெளியிட வேண்டாம். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், ப்ரவுன்




புதன், 13 நவம்பர், 2013

தின ராசி பலன்(13.11.2013)


மேஷம்: 
இன்று, நீங்கள் பிறருக்காக, எவ்வித பொறுப்பும் ஏற்கக் கூடாது. தி்ட்டம் நிறைவேறும் முன்பாக, அதன் முடிவைப் பற்றி பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற போட்டியை, திறமையுடன் செயல்பட்டு சமாளிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். நிர்பந்த பணக்கடனில், ஒரு பகுதி செலுத்துவீர்கள்.
ரிஷபம்:
 இன்று, பொது நல மனப்பாங்குடன் செயல்படுவீர்கள். துவங்குகிற முயற்சி, இஷ்ட தெய்வ அருளால் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி சிறந்து, மன நிறைவைத் தரும். பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டு. பிணி, தொந்தரவு விலகி, உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும்.
மிதுனம்:
 இன்று, உங்களின் அணுகுமுறை மாற்றத்தால், நல்ல பலன்களை பெறுவீர்கள். விலகிச் சென்ற உறவினர், விரும்பி சொந்தம் பாராட்டுவர். தொழில், வியாபாரம் செழித்து, புதிய பரிமாணம் உருவாகும். சராசரி பணவரவுடன், நிலுவைப் பணம் வசூலாகும். விருந்து உபசரிப்பில் பங்கேற்பீர்கள்.
கடகம்: 
இன்று, கவனக்குறைவான செயலினால், மனதில் பதற்றம் ஏற்படலாம். உங்கள் நலம் விரும்புபவரின், ஆலோசனை கேட்டு செயல்படுவதால், நன்மை வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். முக்கிய செலவுக்கு கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும்.
சிம்மம்: 
இன்று, உங்களின் முன் யோசனை செயல் மட்டுமே, தகுந்த நன்மையை பெற்றுத் தரும். தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். திருப்திகரமான அளவில் பணவரவு கிடைக்கும். அடுத்தவர் பார்வையில் படும்படி, அதிக பணம் செலவு செய்ய வேண்டாம்.
கன்னி:
இன்று, உங்கள் மனசாட்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் தருவீர்கள். நண்பர், உறவினர் நல்அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். வாசனை திரவியங்களை விரும்பி பயன்படுத்துவீர்கள்.
துலாம்: 
இன்று, தைரிய மனதுடன் செயல்களில் ஈடுபடுவீர்கள். கடந்த காலத்தில் தொல்லை கொடுத்தவர், இடம் மாறிப் போகிற நன்னிலை உண்டு. தொழில், வியாபார வளர்ச்சியில், புதிய பரிமாணம் ஏற்படும். கூடுதல் பணவரவு கிடைக்கும். உறவினர்களின் வருகையால், வீட்டில் மகிழ்ச்சி வளரும்.
விருச்சிகம்: 
இன்று, உங்கள் மனம் விரும்பாத நிகழ்ச்சியில், ஒதுங்கி இருப்பது நல்லது. சக தொழில், வியாபாரம் சார்ந்தவர்களிடம், பெரிய அளவில் உதவி எதுவும் கேட்க வேண்டாம். பணி நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். பணத் தேவையின் அளவு அதிகரிக்கும். சீரான ஓய்வு உடல்நலம் காக்கும்.
தனுசு:
 இன்று, பின்விளைவு உணர்ந்து செயல்படுவது நல்லது. சிலரது பேச்சில், அதிருப்தி மனப்பன்மை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி, நிறைவேற்றுவதில் தாமதம் இருக்கும். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு தகுந்த சிகிச்சை உதவும். வெளியூர் பயணத்திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள்.
மகரம்: 
இன்று, கடந்த நாட்களில் உங்களை அவமதித்து பேசிய ஒருவர், தன் செயலுக்கு மன்னிப்பு கோருவர். மனதில் புத்துணர்வு பெறுவீர்கள். நம்பிக்கையுடன் பணிபுரிந்து தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை காண்பீர்கள். உபரி பணவருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். இல்லறத்துணையின் அன்பில் மகிழ்வீர்கள்.
கும்பம்: 
இன்று, உங்கள் பேச்சு, செயலில் தகுந்த நிதானம் பின்பற்ற வேண்டிய சூழ்நிலை இருக்கும். தொழி்ல், வியாபாரத்தில் உள்ள நடைமுறை சிரமங்களை, பிறரிடம் விவாதிக்க வேண்டாம். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் தாமதம் இருக்கும். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்பது நலம். இசைப்பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.
மீனம்:
 இன்று, உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எவரிடமும் சாந்த குணத்துடன் பேசுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை இலக்கு திருப்திகரமாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் கைவந்து சேரும்.

செவ்வாய், 12 நவம்பர், 2013

தின ராசி பலன்(12.11.2013)

மேஷம்:
இன்று, நீங்கள் சாமர்த்தியமாக பேசி நண்பர், உறவினர்களிடம் நற்பெயர் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி எளிதாக நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். சிறு அளவில் தான, தர்ம செயல் புரிவீர்கள். பணியாளர் சிறப்பாக பணிபுரிந்து, சலுகைப் பயன் பெறுவர். நித்திரையில் இனிய கனவு வரும்.
ரிஷபம்:
 இன்று, உங்களின் தனித்திறமை நண்பர், உறவினரால் பாராட்டு பெறும். மனதில் உற்சாகம், மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உருவான இடையூறு, சரி செய்வீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். அழகு சாதனப் பொருட்களை விருப்பமுடன் பயன்படுத்துவீர்கள். மாணவர்கள், பெற்றோரிடம் விரும்பிய பொருள் கேட்டுப் பெறுவர்.
மிதுனம்:
 இன்று, நீங்கள் பொது இடங்களில் நடக்கிற நிகழ்வு ஒன்றினால், மனதி்ல் வருத்தம் கொள்வீர்கள். அன்றாட பணிகளை நிறைவேற்றுவதால், சில நன்மை உருவாகும். தொழில், வியாபார நடைமுறை செழிக்க, கிடைக்கிற புதிய வாய்ப்புகளை பயன்படுத்துவது நல்லது. பணவரவை விட, செலவு அதிகரிக்கும். காலமுறை உணவுப்பழக்கம் உடல்நலம் ஆரோக்கியம் பெற உதவும்.
கடகம்: 
இன்று, உங்கள் உறவினர் அனுகூலமாக நடந்து கொள்வர். மனதில் கூடுதல் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு, தி்ட்டமிட்டபடி நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். சுபச்செலவு செய்து மகிழ்வீர்கள். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.
சிம்மம்:
 இன்று, மனதில் உருவாகும் சந்தோஷத்தினால், பொதுநலப் பணிபுரிவீர்கள். சமூகத்தில் கிடைக்கிற அந்தஸ்து உயரும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி எளிதாக நிறைவேறும். பண பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். வெகுநாள் விரும்பிய பொருள் வாங்குவீர்கள்.
கன்னி: 
இன்று, உங்களுக்கு எதிராக செயல்பட்ட சிலர், இடம் மாறிப்போகிற நன்னிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை அதிகரித்து, இனிய அனுபவம் பெறுவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். வீட்டுத் தேவைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவீர்கள். போட்டி, பந்தயத்தில் வெற்றி பெற அனுகூலம் உண்டு.
துலாம்: 
இன்று, செயல் நிறைவேற தாமதம் ஆவதால், மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். நல்லவர், அனுபவசாலியின் ஆலோசனை பெறுவதால் நன்மை கிடைக்கும். கூடுதல் உழைப்பால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை சீராகும். பணவரவு, சிக்கன செலவுக்கு பயன்படும் வகையில் இருக்கும். இயந்திர தொழிற்சாலை பணியாளர்கள் கூடுதல் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது நல்லது.
விருச்சிகம்: 
இன்று, உங்கள் செயல்களின் நோக்கம் உணர்ந்து, பணிபுரிவது அவசியம். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி, தொந்தரவு தரலாம். உற்பத்தி, விற்பனை சீராக, கூடுதல் உழைப்பு மட்டுமே உதவும். பணச்செலவில், சிக்கன நடைமுறை பின்பற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர் உதவிகரமாக நடந்து கொள்வர்.
தனுசு: 
இன்று, உங்கள் மீது பிறர் சொல்லும் தேவையற்ற விமர்சனத்தை பெரிதுபடுத்த வேண்டாம். உழைப்பில் கவனம் கொள்வதால், நடப்பவை நல்லவிதமாக அமைந்து விடும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். குடும்ப செலவுகளில், தாராள குணம் பின்பற்றுவீர்கள். இசைப்பாடலை ரசிப்பதால் மனதில் நம்பிக்கை வளரும்.
மகரம்:
 இன்று, உங்களின் எதார்த்த பேச்சு சிலருக்கு, சிரமம் தரலாம். சமூகத்தில் பெற்ற நற்பெயரை, பாதுகாக்கும் வகையில் செயல்படுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை செழிக்க, கூடுதல் பணம் தேவைப்படும். நிலுவைப்பணம் வசூலிப்பதில், நிதான அணுகுமுறை பின்பற்ற வேண்டும். காலமுறை உணவுப்பழக்கம், உடல்நலம் ஆரோக்கியம் பெற உதவும்.
கும்பம்:
 இன்று, உங்கள் செயல்களில் எளிமையும், நிதானமும் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி திட்டமிட்டபடி பூர்த்தி செய்வீர்கள். சராசரி பணவரவுடன் நிலுவைப்பணம் வசூலாகும். உறவினர் வருகையால், வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, விவகாரத்தில் சமரச தீர்வு கிடைக்கும்.
மீனம்:
 இன்று, நீங்கள் நல்லதை செய்தும், மன வருத்தம் ஏற்படலாம். பொது விவகாரங்களில் கருத்து சொல்வதை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் நிறைவேற்ற வேண்டிய பணிச்சுமை அதிகரிக்கும். பணச்செலவுகளில் சிக்கன நடைமுறை பின்பற்றவது நல்லது. தியானம், தெய்வ வழிபாடு செய்வதால், மனதில் புத்துணர்வு உருவாகும்.