செவ்வாய், 12 நவம்பர், 2013

தின ராசி பலன்(12.11.2013)

மேஷம்:
இன்று, நீங்கள் சாமர்த்தியமாக பேசி நண்பர், உறவினர்களிடம் நற்பெயர் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி எளிதாக நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். சிறு அளவில் தான, தர்ம செயல் புரிவீர்கள். பணியாளர் சிறப்பாக பணிபுரிந்து, சலுகைப் பயன் பெறுவர். நித்திரையில் இனிய கனவு வரும்.
ரிஷபம்:
 இன்று, உங்களின் தனித்திறமை நண்பர், உறவினரால் பாராட்டு பெறும். மனதில் உற்சாகம், மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உருவான இடையூறு, சரி செய்வீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். அழகு சாதனப் பொருட்களை விருப்பமுடன் பயன்படுத்துவீர்கள். மாணவர்கள், பெற்றோரிடம் விரும்பிய பொருள் கேட்டுப் பெறுவர்.
மிதுனம்:
 இன்று, நீங்கள் பொது இடங்களில் நடக்கிற நிகழ்வு ஒன்றினால், மனதி்ல் வருத்தம் கொள்வீர்கள். அன்றாட பணிகளை நிறைவேற்றுவதால், சில நன்மை உருவாகும். தொழில், வியாபார நடைமுறை செழிக்க, கிடைக்கிற புதிய வாய்ப்புகளை பயன்படுத்துவது நல்லது. பணவரவை விட, செலவு அதிகரிக்கும். காலமுறை உணவுப்பழக்கம் உடல்நலம் ஆரோக்கியம் பெற உதவும்.
கடகம்: 
இன்று, உங்கள் உறவினர் அனுகூலமாக நடந்து கொள்வர். மனதில் கூடுதல் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு, தி்ட்டமிட்டபடி நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். சுபச்செலவு செய்து மகிழ்வீர்கள். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.
சிம்மம்:
 இன்று, மனதில் உருவாகும் சந்தோஷத்தினால், பொதுநலப் பணிபுரிவீர்கள். சமூகத்தில் கிடைக்கிற அந்தஸ்து உயரும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி எளிதாக நிறைவேறும். பண பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். வெகுநாள் விரும்பிய பொருள் வாங்குவீர்கள்.
கன்னி: 
இன்று, உங்களுக்கு எதிராக செயல்பட்ட சிலர், இடம் மாறிப்போகிற நன்னிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை அதிகரித்து, இனிய அனுபவம் பெறுவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். வீட்டுத் தேவைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவீர்கள். போட்டி, பந்தயத்தில் வெற்றி பெற அனுகூலம் உண்டு.
துலாம்: 
இன்று, செயல் நிறைவேற தாமதம் ஆவதால், மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். நல்லவர், அனுபவசாலியின் ஆலோசனை பெறுவதால் நன்மை கிடைக்கும். கூடுதல் உழைப்பால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை சீராகும். பணவரவு, சிக்கன செலவுக்கு பயன்படும் வகையில் இருக்கும். இயந்திர தொழிற்சாலை பணியாளர்கள் கூடுதல் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது நல்லது.
விருச்சிகம்: 
இன்று, உங்கள் செயல்களின் நோக்கம் உணர்ந்து, பணிபுரிவது அவசியம். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி, தொந்தரவு தரலாம். உற்பத்தி, விற்பனை சீராக, கூடுதல் உழைப்பு மட்டுமே உதவும். பணச்செலவில், சிக்கன நடைமுறை பின்பற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர் உதவிகரமாக நடந்து கொள்வர்.
தனுசு: 
இன்று, உங்கள் மீது பிறர் சொல்லும் தேவையற்ற விமர்சனத்தை பெரிதுபடுத்த வேண்டாம். உழைப்பில் கவனம் கொள்வதால், நடப்பவை நல்லவிதமாக அமைந்து விடும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். குடும்ப செலவுகளில், தாராள குணம் பின்பற்றுவீர்கள். இசைப்பாடலை ரசிப்பதால் மனதில் நம்பிக்கை வளரும்.
மகரம்:
 இன்று, உங்களின் எதார்த்த பேச்சு சிலருக்கு, சிரமம் தரலாம். சமூகத்தில் பெற்ற நற்பெயரை, பாதுகாக்கும் வகையில் செயல்படுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை செழிக்க, கூடுதல் பணம் தேவைப்படும். நிலுவைப்பணம் வசூலிப்பதில், நிதான அணுகுமுறை பின்பற்ற வேண்டும். காலமுறை உணவுப்பழக்கம், உடல்நலம் ஆரோக்கியம் பெற உதவும்.
கும்பம்:
 இன்று, உங்கள் செயல்களில் எளிமையும், நிதானமும் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி திட்டமிட்டபடி பூர்த்தி செய்வீர்கள். சராசரி பணவரவுடன் நிலுவைப்பணம் வசூலாகும். உறவினர் வருகையால், வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, விவகாரத்தில் சமரச தீர்வு கிடைக்கும்.
மீனம்:
 இன்று, நீங்கள் நல்லதை செய்தும், மன வருத்தம் ஏற்படலாம். பொது விவகாரங்களில் கருத்து சொல்வதை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் நிறைவேற்ற வேண்டிய பணிச்சுமை அதிகரிக்கும். பணச்செலவுகளில் சிக்கன நடைமுறை பின்பற்றவது நல்லது. தியானம், தெய்வ வழிபாடு செய்வதால், மனதில் புத்துணர்வு உருவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக