திங்கள், 11 நவம்பர், 2013

தின ராசி பலன்(11.11.2013)

மேஷம்: 
இன்று, சிறிய பணி நிறைவேற்றவும், அதிக கால அவகாசம் தேவைப்படும். சக தொழில், வியாபாரம் சார்ந்த எவரிடமும் சச்சரவு வேண்டாம். உற்பத்தி, விற்பனை அளவுடன் இருக்கும் பணப்பரிவர்த்தனையில், தகுந்த பாதுகாப்பு, நடைமுறை பின்பற்ற வேண்டும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பதால், ஆரோக்கியம் பலம் பெறும்.
ரிஷபம்: 
இன்று, உங்கள் மனம் தெளிந்த நீரோடை போல இருக்கும். எந்த காரியத்திலும், சமயோசிதமாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து, வாழ்வில் கூடுதல் நம்பிக்கை கொள்வீர்கள். உபரி வருமானம் வந்து சேரும். குடும்பத்தின் முக்கிய தேவையை நிறைவேற்றுவீர்கள்.
மிதுனம்:
 இன்று, அவசரப் பணி ஒன்று உருவாகி, அல்லல் தரலாம். அக்கம்பக்கத்தவருடன் அதிக பேச்சு கூடாது. தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத் தன்மையை பாதுகாக்க, கூடுதல் உழைப்பு உதவும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வீடு, வாகன பராமரிப்பு பணி தேவைப்படும். ஓய்வு நேரத்தில் இசைப் பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.
கடகம்:
 இன்று, உங்கள் வாழ்வுக்கு பயன்படாத வகையில், சிலர் பேசுவதை கவனிக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் போட்டியும், அதனால், மனதில் பரபரப்புத் தன்மையும் ஏற்படலாம். பொறுமையுடன் செயல்படுவதால், உற்பத்தி, விற்பனை சீராகும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.
சிம்மம்: 
இன்று, உங்கள் நடை, உடை, செயல்களில் சில மாற்றம் ஏற்படும். வேடிக்கையாக, சிலரிடம் முன்னர் கேட்ட உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். உபரி பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். உத்தியோகஸ்தர், பணியாளர்களிடம் நல் அன்பு, பாராட்டி வேலை வாங்குவர்.
கன்னி:
 இன்று, உங்களின் எளிய முயற்சியால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். நன்றி மறந்த ஒருவரை மன்னிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி திருப்திகரமாகும். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். இல்லறத்துணை கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார்.
துலாம்
இன்று, உங்கள் இஷ்ட தெய்வத்தி்ன் அனுக்கிரகம் பெறுவீர்கள். தி்ட்டமிட்ட பணி எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அனுகூலம் ஒரு சேர கிடைக்கும். பணவரவுடன், நிலுவைப் பணம் வசூலாகும். கூடுதல் பொருள் சேர்க்கை பெறுவீர்கள்.
விருச்சிகம்:
 இன்று, உங்களின் நற்குணம் அறியாதவரிடம், சொந்த விஷயம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிறைவேற்ற வேண்டிய பணியின் அளவு அதிகரிக்கும். கூடுதல் உழைப்பினால் உற்பத்தி, விற்பனை சீராகும். அளவான பணவரவு கிடைக்கும். கவுரவம் காப்பாற்ற தாராள பணச்செலவு செய்வீர்கள்.
தனுசு:
 இன்று, திட்டமிட்ட பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். உலக நடப்பை அறிவதில் ஆர்வம் வளரும். தொழில், வியாபாரம் செழித்து, மனதில் அதிக மகிழ்ச்சி பெறுவீர்கள். உபரி பணவருமானம் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவர்.
மகரம்: 
இன்று, உங்களுக்கு நம்பகத் தன்மை இல்லாதவர்களிடம், ரகசியம் எதுவும் சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் தேவையான மாற்றங்களை, பின் ஒரு அனுகூல நாளில் செய்யலாம். உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணம் சிக்கனமாக செலவு செய்வீர்கள். சீரான ஓய்வு பின்பற்றுவதால், உடல் நல ஆரோக்கியம் பலம் பெறும்.
கும்பம்:
 இன்று, உங்கள் மீது, பலரும் நல்ல எண்ணம் கொள்கிற வகையில், நேர்மையுடன் நடந்து கொள்வீர்கள். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். தொழில், வியாபார நடைமுறையில் உருவான குறுக்கீடு விலகும். ஆதாய பணவரவு கிடைக்கும். இல்லறத் துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.
மீனம்:
 இன்று, உங்களிடம் எதிர்மறையாக செயல்படுபவர்களிடம் விலகுவதால், நன்மை பெறலாம். தொழில், வியாபாரத்தில் ஆரவாரத் தன்மை தவிர்க்கவும். எதரிபார்த்த பணவரவு கிடைப்பதில் தாமதம் இருக்கும். உடல் நலத்திற்கு சிறு அளவிலான சிகிச்சை தேவைப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக