வியாழன், 7 நவம்பர், 2013

ஆண்களுக்கு இடது கண்ணும், பெண்களுக்கு வலது கண்ணும் துடித்தால் கெட்டது நடக்குமா?





சிலருக்கு ஒரு கண் மட்டும் அடிக்கடி துடிக்கும். அவ்வாறு துடிக்கும் போது, ஒருசில மூடநம்பிக்கைகளானது மக்கள் மத்தியில் உள்ளது. அது என்னவென்றால், ஆண்களுக்கு வலது கண் துடித்தால், நல்லது நடக்கும், அதுவே பெண்களுக்கென்றால் தீமை ஏற்படும் என்றும், ஆண்களுக்கு இடது கண் துடித்தால் கெட்டது நடக்கப் போகிறது, அதுவே பெண்களுக்கானால் நல்லது நடக்கும் என்று நம்புகின்றனர். உண்மையில் இது மிகப்பெரிய முட்டாள்தனமான ஒரு மூடநம்பிக்கை என்று தான் சொல்ல வேண்டும். ஆம், நல்லது கெட்டது நடப்பதற்கும், கண்களுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சிந்திக்காமல், குருட்டுத்தனமாக பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த மாதிரி கண்கள் துடிப்பதற்கு, உடலில் ஒருசில பிரச்சனைகள் உள்ளது என்பதற்கான அறிகுறியாகும். அதுமட்டுமல்லாமல், கண்கள் துடிப்பதற்கு ம்யோகிமியா (myokymia) என்று பெயர்.
இத்தகைய கண் துடிப்பு அல்லது தசைச் சுருக்கம் ஏற்படுவதற்கு அதிகப்படியான மன அழுத்தம், தூக்கமின்மை, அதிகமாக காப்ஃபைன் உட்கொள்ளுதல் மற்றும் பல காரணங்களாகும். சிலருக்கு கண் துடிப்பானது ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கூட இருக்கலாம். சரி, இப்போது இந்த கண் துடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, கண்கள் துடித்தால் என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்து கண் துடிப்பில் இருந்து விடுபடுங்கள்.
மன அழுத்தம்
மன அழுத்தமானது அதிகம் இருந்தாலும் கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். எனவே மன அழுத்ததைக் குறைக்கும் செயல்களில் ஈடுபட்டால், அடிக்கடி கண்கள் துடிப்பதை தவிர்க்கலாம்.
தூக்கமின்மை
மன அழுத்தம் அதிகம் இருந்தால், தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்க நேரிடும். இவ்வாறு சரியான தூக்கம் இல்லாவிட்டால், கண்களானது துடிக்கும்.
கண்களுக்கு சிரமம்
கண்களுக்கு அதிகப்படியான சிரமத்தைக் கொடுத்தாலும், கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். உதாரணமாக, படிக்கும் போது சரியாக தெரியாவிட்டால், அப்போது கண்களை பரிசோதித்து, அதற்கு கண்ணாடிகளை போடாமல், சிரமப்படுத்தி அப்படியே படித்து கண்களுக்கு சிரமம் கொடுத்தாலும், கண்கள் துடிக்கும். மேலும் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது மொபைல்களை பார்த்துக் கொண்டே இருந்தால், கண்கள் களைப்படைந்துவிடும். இதனால் கண்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு துடிக்க ஆரம்பிக்கும். ஆகவே கம்ப்யூட்டர் அல்லது மொபைல் பயன்படுத்தும் போது, சரியான கண்ணாடிகளை அணிந்து கொண்டு பயன்படுத்தினால், கண் துடிப்பில் இருந்து விடுபடலாம்.
காப்ஃபைன்
அதிகமாக காப்ஃபைன் உள்ள பொருட்களான காபி, டீ போன்றவற்றை அருந்தினாலும், கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். எனவே இத்தகைய பொருட்களை அதிகம் பருகுவதை தவிர்ப்பது நல்லது.
ஆல்கஹால்
ஆல்கஹாலை அதிகம் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, கண்கள் துடிக்கும். ஆகவே ஆல்கஹாலை அதிகம் பருகாமல், மருந்து போன்று எடுத்துக் கொள்வது நல்லது.
கண் வறட்சி
கண் வறட்சியினாலும், கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். போதிய தண்ணீர் பருகாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் இருப்பது, காப்ஃபைன் உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்வது, மன அழுத்தம், சோர்வு போன்றவற்றால் கண்களானது வறட்சியடைகிறது. ஆகவே இத்தகைய செயல்களை தவிர்த்தால், கண் வறட்சியில் இருந்து விடுபடலாம்.
ஊட்டச்சத்து குறைபாடு
சில ஆய்வுகள் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் கண்களில் உள்ள தசைகள் துடிக்க ஆரம்பிக்கும் என்று சொல்கிறது. அதிலும் மக்னீசியம் குறைபாடு இருந்தால், கண்கள் துடிக்கும் என்று கூறுகிறது. ஆகவே சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுமுறைகளை மேற்கொண்டால், கண்கள் துடிப்பதை தவிர்க்கலாம்.
அலர்ஜி

சிலருக்கு கண் அலர்ஜிகள் ஏற்படும். கண் அலர்ஜிகளான கண்களில் அரிப்பு, வீக்கம், கண்கள் சிவப்பாகி கண்ணீர் வடிதல் போன்றவற்றின் போது, கண்களை தேய்த்தால் வெளிவரும் ஹிஸ்டமைன் கண் திசுக்களில் நுழைந்து, கண்களை துடிக்க வைக்கும். ஆகவே கண் அலர்ஜி இருந்தால், அப்போது தேய்க்காமல், கண் மருத்துவரை அணுகி, சரியான மருந்துகளை எடுத்துக் கொண்டால், கண் துடிப்பில் இருந்து விடுபடலாம்.

100 ஆண்டுக்கு ஒரு தடவை வரும் 11–12–13 அன்று திருமணம் நடத்த இளைஞர்கள் ஆர்வம்





உலகில் பல்வேறு அரிய நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடக்கின்றன. ஆனால் அரிய நாள் என்பது அத்தி பூத்தாற்போன்று எப்போதாவதுதான் வரும். அந்த அரிய நாள் வருகிற டிசம்பர் 11–ந்தேதி வருகிறது. 100 ஆண்டுகளுக்கு ஒரு தடவை வரும் அந்த அபூர்வ நாளாக இது கருதப்படுகிறது. அதுதான் 11.12.13 என்றழைக்கப்படும் 11.12.2013 ஆகும்.
இந்த நாளை அதிர்ஷ்ட நாளாக இளைஞர்களும், இளம் பெண்களும் கருதுகின்றனர். அதை தங்களின் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக விரும்புகின்றனர். எனவே, அன்று தங்கள் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளில் 2,265 ஜோடிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தகவலை அமெரிக்காவை சேர்ந்த தனியார் திருமண ஏற்பாட்டாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் வருகிற நவம்பர் 12–ந்தேதி அல்லது டிசம்பர் 11–ந்தேதி திருமணம் செய்ய பெரும்பாலான ஜோடிகள் ஆர்வமாக இருப்பது தெரிய வந்தது. இது கடந்த 2012–ம் ஆண்டில் அன்றைய கால கட்டத்தில் நடந்த திருமணத்தைவிட 72.2 சதவீதம் அதிகம் என கணக்கிட்டுள்ளது.

தின பலன் 7.11.2013


இன்றைய தினம் கையில் காசுபணம் புரளும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். உடன்பிறந்தவர் களின் நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபார ரீதியாக சிலரை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். அடிக்கடி செலவு வைத்த வாகனம் இனி சீராகும். பெற்றோரின் ஆதரவு கிட்டும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிளிப் பச்சை
 
 
சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர் மஞ்சள், ப்ரவுன்
 
 
 மிதுனம்
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பாத்தாருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். தாயின் உடல்நிலைசீராக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்தபடி உதவிகள் கிடைக்கும். அம்மாவின் உடல்நிலை சீராகும். மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப் படுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ் பச்சை, வெள்ளை
 
 
முகப்பொழிவுடன் காணப்படுவீர்கள். முடியாமல் போன சில காரியங்களை இன்று முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கண் எரிச்சல், தூக்கமின்மை விலகும். பழைய நண்பர்களின் சந்திப்பு நிகழும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டறிவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். அக்கம் - பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
 
 
 சிம்மம்
உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் அனுசரித்துப்போவிர்கள். புதிய எண்ணங்கள் மனதில் தோன்றும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, ரோஸ்
 
 
இன்றைய தினம் மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அவர்களின் உடல் நிலை சீராக அமையும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களைச் சந்திப்பீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதரவு உண்டு. அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிரே
 
 
பரபரப்புடன் காணப்பட்ட நீங்கள் இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். அவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். வியாபார ரீதியாக பிரபலங்களைச் சந்திப்பீர்கள். தலைவலி, இடுப்பு வலி நீங்கும். அக்கம் - பக்கம் வீட்டாரின் அனபுத்தொல்லைகள் விலகும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். கோபம் நீங்கும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
 
 
 விருச்சிகம்
முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த சிக்கலுக்கு முடிவு கட்டுவீர்கள். நீண்டநாள் ஆசைகளை பூர்த்தி செய்துக்கொள்வீர்கள். கணவன் - மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. தந்தையின் உடல்நிலை சீராக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாகனப்பழுது நீங்கும். வெளியூர் பயணங்களால் சந்தோஷமடைவிர்கள். உத்தியோகத்தில் மன உளைச்சல் விலகும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, நீலம்
 
 
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, மயில் நீலம்
 
 
எடுத்த வேலைகளை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், மஞ்சள்
 
 
 கும்பம்
இன்றைய தினம் எதிர்ப்புகள், இழப்புகள், ஏமாற்றங்கள் நீங்கும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதைக் கூடும். சகோதரர்கள் உதவுவார்கள். வியாபரத்தில் பாக்கிகளை விரைந்து வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படு வீர்கள். பணிகளிலிருந்து வந்த தேக்க நிலை மாறும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், ப்ரவுன்
 
 
இன்றைய தினம் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளை நல்வழிபடுத்து வீர்கள். அவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. வீண் செலவுகளைத் தவிர்ப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், இளஞ்சிவப்பு